என்ன தப்பா
வழியெங்கும் புதுமுகங்கள்..
கடைகளெல்லாம் தெரிந்தது புதிதாய்..
மாலைச்சூரியன் கூட
எனைப்பார்த்து ஏளனமாய் சிரிப்பதாய் தோன்றியது..
இதில் பார்ப்போரெல்லம் துளைத்தனர் பல கேள்விக்கணைகளால்..
"உடம்புக்கு என்ன?
என்னாச்சு.. எப்படி இந்நேரத்துல இங்க..?.
என்ன அலுவலகத்துக்கு விடுப்பா?"
என்னையா உலகம் இது?
தினம் தினம் சூரியன் மறைந்தபின்பு
நிலவு மேடை ஏறிய பின்பு
அலுவலகத்தில் இருந்து வீடு சென்ற நான்..
இன்று சீக்கிரமே வீடு செல்வது
என்ன தப்பா???