பணம் படுத்தும் பாடு
இருக்கும் சின்னதாய்
இதுவின்றி ஓரணுவும் அசையாது உலகில்
பல துரோகங்களின் மூலகர்த்தா
பல பெரும்புள்ளிகளின் பம்பரக்கயிறு
இதனால் பம்பரமாய் ஆக்கிடுவர் பலரை
ஏழ்மைக்கோ எட்டாது
பல பலிகளின் கரு
எவரிடமும் குறைவாய் இருந்தால்
கட்டுப்பாட்டோடு இருக்கும்
மிகுதியாகி விட்டாலோ
அவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
இதை உண்ணமுடியாது
இதுவின்றி உண்ணவேமுடியாது
இதனால் ஆகாத காரியமும் ஆகும்
ஆக வேண்டிய வேலையும் நிற்கும்
இதற்கு தன் மனதில் பெரியஇடம் கொடுத்துள்ளான் மனிதன்
அதனாலேயே அவனை அடிமையாக்கி
சுழட்டி சுழட்டி அடிக்கிறது
இதனிடம் விழுந்தவன் எழமுடியாது
விழாமல் தப்பிப்பவனோ ஞானியாகிறான்