கிராமத்து தமிழச்சிகள்
தங்கத்தின் தங்கங்கள்
ஜொலிக்கும் வைரங்கள்
பாரம்பரிய சின்னங்கள்
வெள்ளாந்தி எண்ணங்கள்
மனம்மயக்கும் பட்டாம்பூச்சிகள்
இனிக்கபேசும் கற்கண்டுகள்
வாழ்க்கையின் எதார்த்தங்கள்
பழகவே இனிக்கும்பதார்த்தங்கள்
மயக்கவைக்கும் கேலிகள்
மணக்கும் மல்லிகைகள்
கண்ணைப்பறிக்கும் ரோசாக்கள்
ஒவ்வொருவீட்டிற்கும் ராசாக்கள்
அழகிய செம்பருத்திகள்
சலசலக்கும் நெற்கதிர்கள்
தெளிந்த தண்ணீராய் இவரது மனங்கள்
இவர்தாம் எங்கள் கிராமத்து தமிழச்சிகள்