10 செகண்ட் கதைகள் - வாக்காளருக்கு பணம்
" மச்சி.. வீட்டுக்கு போயிட்டு வர்றேன்டா.. "
" ஓ.கே.. கையில எவ்ளோ பணம் வெச்சி இருக்கே..? "
" சம்பள பணம் 35,000 இருக்கு. ஏன் கேக்கற..? "
" வழில பறக்கும்படை இருந்தா புடிச்சிப்பாங்க..
அதுக்கு சொன்னேன்..!! "
" ஹேய்.. ஹேய்.. உனக்கு ரூல்ஸ் தெரியாதா..?
ஒருத்தர் 50,000 வரை கொண்டு போலாம்..! "
" ஓ.. ரூல்ஸூ... எங்ககி்ட்டயே...!! சரி..,
இத கொண்டு போயி யார்கிட்ட குடுப்பே..? "
" என் Wife-கிட்ட..! "
" உன் Wife-க்கு ஓட்டு இருக்கா..? "
" ஓ இருக்கே..! "
" அப்ப உன் Wife ஒரு வாக்காளர்..
நீ வாக்காளர்க்கு பணம் குடுக்க போறே..
புடிங்க சார் இவனை.. புடிச்சு ஜெயில்ல
போடுங்க சார்...! "
# அடப்பாவி...!!!!