முத்தங்கள்
காதலின் மொத்த
அர்த்தத்தையும்
முழுதாய் உணர்த்தியவள் நீ
நீ தந்த முதல் முத்தம்
மழை நின்ற பின்னும்
மரம் தந்த மழை போன்றது
நீ எவ்வளவு அழகோ
அதை விட பன்மடங்கு அழகு
நீ தரும் முத்தங்கள்
உன்னிடம் விரும்பியே
தோற்கிறேன்
நமக்குள் நடககும்
அந்த முத்த யுத்தத்தில்
பட்ட காயத்தின் வலி
அதிகம் தான்
அந்த வலியை போக்கும்
உன் முத்தத்திற்கு
வலிமையும் அதிகம் தான்
சிறந்த தலைவலி
நிவாரணி உன்
முத்தங்கள்
நீ தரும் முத்தங்களுக்குள்
மூழ்கி இருக்கிறது
என் இரவுகள்
நீ திட்டி விட்டு
தரும் முத்தங்கள்
எனக்கு தித்திப்பானவை
உனக்கு திருப்தியானவை
மூவுலகிலும் கிடைக்காத
மூலிகை உன் முத்தங்கள்
என் முத்தயியலின்
மொத்த உருவமே
உன்னை என்னிடமிருந்து
பிரித்தெடுக்க
மரணத்தால் மட்டுமே முடியும்