குழந்தை
கால்களை நீட்டி கைகளை அசைத்து நீ ஆடும் தருணம் கண்கள் மயங்கி உன்னை ரசிகுதடா
கண்ணனே நீ என் கைவிரல் பிடித்து நடக்கையிலே காலங்கள் நேரங்கள் எல்லாம் மறையுதடா
கண்களை உருட்டி பைந்தமிழ் மொழி தான் நீ பேச பனிபோல் கரையுதடா பாவை என் நெஞ்சம்
நெல்நுனி பல் கொண்டு பால் வண்ணப்பிள்ளை நீ சிரிக்கையிலே பாவி நெஞ்சம் பறிபோனதடா
இப்படி ஒன்றென்ராய் திருடி என்னையே திருடி விட்டாய் அடா
என்னை திருடிய பச்சை குழந்தை நீ தான் அடா.....(செல்வம்)