வறேுநிலாக்கள் 44-ருத்ராநாகன்

ஜென்மயாசகம்....!!
நரகம் புனிதமாகு மென
யென்
மனநிலத்தை பார்வையிட
வந்த
சொர்க்கவாசிகள் புரிந்திருக்க
கூடும்......!!!

யென் உடற்குருதிக்கு
அப்பால் ஓர் நதி ஓடும்....
அந்நதிக்கரையில் நீந்தி நான்
வெளி வருகையில்
உடல் முழுதிலும் அம்புகள்
பாய்ந்து அகாலமாய்
நான் இறந்திருக்க கூடும்....


நான் கதறக் கதற
யென் கண்ணைக் கொத்தித்தின்ன வரும் உன் ஞாபகக்கழுகுகள்,
எனைச்சுமந்து கொண்டு போய்
ஓர் அமானுசிய இருளில்,
இரகசிய உணவாக்கி
இராத்திரி வேளை மட்டும்
கதறக்கதற கொல்லும்.....

எனைக்காவு வாங்கிய
உன் இதயக்காட்டெறிக்குள்
மீண்டும் மீண்டும்
இடறி விழுந்தே யென்
கண்ணீர்ப் பிஞ்சுகள்
பலியாகக் கூடும்......

நான் எழுதி யழித்து
வெறியோடு வெளியே வீசிய
உன் மரணயாசகம்,
யென் பிணத்தருகே வந்து
மனமிறங்கி கண்ணீர் வடித்து
ஒப்பாரி வைக்க கூடுமெனில்,

எனக்கான உயிலில்
உன்க்காய் நானெழுதிய
'ஜென்மயாசகம் ,'
உன் கண்ணீர் மடியில்
காயத்தோடு வந்து விழுக்கூடும்...

இல்லையேல்
யென் கல்லறைமடியில்
இரத்தசாயத்தோடு
மாய்ந்து போகக்கூடும்........!!!!!

எழுதியவர் : ருத்ரா நாகன் (17-May-16, 7:45 am)
பார்வை : 90

மேலே