நினைவுகள் நெஞ்சை வருத்தும்

தமிழன் தரணியில்
வாழும் வரை
மறையாத
நம் இனச் சாவின்
கறைபடிந்த
காலம் இந்த
மே 18......!!!

காக்க மறந்த
அகிலமும்
கண்கலங்கித்தான்
போனது.....காணொளிகளை
பார்த்து...... செய்மதிப்
பார்வையில்
எல்லாமே புள்ளிதான்.....
ஆனாலும் செய்திகள்
எல்லாமே
முள்ளிவாய்க்கால்
அவலம் தான்......!!

நம் இனத்தின்
உயிர்களை
காவுகொண்ட
கயவர் கூட்டம்
கொட்டமடித்து
மகிழ்ந்தாலும்....
கோடி சுகம்
கண்டாலும்......இந்த
சக்கரயுக
வாழ்க்கையில்
சீக்கிரமே
பலன் பெறுவாய்......!!

நம்மை மறந்து
போனது
அயல் தேசம்.....
அதனாலே
நமக்கு
நேர்ந்தது
நாசம்......
கைக்கெட்டும்
தூரம்தான்
என் சொந்தம்
நின்றது.....ஆனாலும்
தம்முடைய
ஆசனங்களை
வலிமைப்படுத்த
நம்
இனசனங்களை
அழியவிட்டு
இன்று
பழியை சுமந்து
விழியை பிரட்டுகிறது......

காலன் கூட
கருணை
கொள்வான்.....
ஆனால்
அந்த பாலன்
பாலச்சந்திரனை
கூட......
இந்தப்
பாவிகள்
விட்டுவைக்கவில்லையே.....??

உதவி காக்கும்
படை
என்று ஐ நா
உங்களையும்
அனுப்புது......இங்கே
தமிழன் ஊருக்குள்ள
கருவறுத்த
கதைகளை
அறிந்தும்
அறியாத
ஐக்கியமில்லாத நா
சபை......!!

ஈழத்தின் தேசம்
எங்கும்
கொட்டும் மழை
மழை
அன்றி....மாண்டுபோன
மாணிக்கங்களை
மனம்
குளிர்விக்கும்
பூமழை தானன்றோ......!?!!!

நாம்
வாழ்ந்த
தேசம்.....அதை
நினைத்தாலே
சந்தோசம்.....அவற்றை
தந்துபோன
உறவுகள்
அங்கேயே
மீளாத்துயிலில்.....உங்கள்
நினைவாக
எங்கள்
இதய அஞ்சலிகள்......!!!

ஓம் சாந்தி..... ஓம் சாந்தி....... ஓம் சாந்தி.....

எழுதியவர் : thampu (18-May-16, 4:16 am)
பார்வை : 241

மேலே