பெண்ணே நலமா

பெண்ணே நலமா கண்ணே நலமா
விண்ணே நலமா நிலவே நலமா
பொன்னே நலமா பூவே நலமா
பேறு காலமடி பெண்ணே மெல்ல நடம்மா !
தளர்ந்த நடையிலும் தளராது வரிசையில் நின்று
தேர்தலில் வாக்களித்த அக புறநானூற்றுப் பூங்கொடியே வாழ்க !
பாட்டி நான் ரொம்ப வெறுத்துப் போச்சு
நோட்டாவுக்குத்தான் ஓட்டுப் போட்டேன்
கருத்துக் கணிப்பாம் கருத்துக் கணிப்பு
அவனவன் அள்ளிவிடறான் அண்டப் புளுகு
வெடிஞ்சா தெரியப் போகுது வெளிச்சம் !
நான்தான் ஒருத்தனும் இல்லேன்னு சொல்லிப்புட்டேனே
யார் வந்தால் எனக்கென்ன ?
கருவில் உயிர் சுமக்கும் ஈருயிர்க்காரி
தொன்நூறைக் கடந்துவிட்ட தொண்டு கிழவி
ஒரு பத்து வருடம்
கொள்ளுப் பேரக் குழந்தைகளை கொஞ்சி விட்டு
கண்ணை மூட வேண்டும் என்று ஆசை கிடந்து அடிக்குதடி
தொல் பாட்டியின் ஆசைக் கனவை நிறைவேற்றுவாயாடி
அம்மா என்று அழைக்க ஒரு பெண்ணும்
ஐயா என்று அழைக்க ஒரு பிள்ளையும் பெற்றுத் தருவாயடி
என் செல்லமே பேத்திப் பெண்ணே !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-May-16, 9:37 am)
Tanglish : penne nalamaa
பார்வை : 97

மேலே