தேர்வு

கண்களை கசக்கிக் கொண்டு இருப்பதனால்
பிரச்சினை ஒன்றும் தீர்ந்து விடாது

நீ எடுக்கும் முடிவு சரியானதாய் இல்லாவிட்டால்
தோல்விகள்தான் தொடரும்...

அதற்காக் நீ ஓய்ந்து விடாதே!

காலாண்டு அரையாண்டில்
தோற்று நீ போனாலும்
இருக்கிறது இறுதித் தேர்வொன்று
அதை மறந்து விடாதே நீ இன்று

விடை தெரியாவிட்டால் என்ன?
தோற்றதற்கு காரணமான
கேள்விகளை தொடுத்துப்பார்
வெற்றியின் இரகசியம் புரியும்

தொடர்ந்து முயன்றால்
தேர்ச்சி பெறுவாய்
தோல்வி என்பது முடிவல்ல
அது வெற்றியின் துவக்கம்

எழுதியவர் : கிச்சாபாரதி (22-May-16, 12:12 pm)
Tanglish : thervu
பார்வை : 189

மேலே