சமன் செய்து பார்

ஆணும் பெண்ணும் சேர்ந்து தினம்
உறவாடும் இராத்திரி
ஒருவர் வருகைக்கு காரணம்
இருவர் இல்லையென்றால் எப்படி?

பிறப்பும் இறப்பும் இயற்கையின் நீதி
ஆணும் பெண்ணும் சமம் என்பதை மறவாதே நீ

ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும்
பெண் மட்டுமல்ல
உனக்குள் தனி தகுதி இருந்தால்
நீயும் இங்கு வெல்லலாம்

ஒரு பெண்ணை நீ
அன்னையாய் பார்க்கையில்
மனம் மயக்கம் பெறுவதில்லை

கவர்ந்து ஈர்ப்பது
பெண்களுக்கு மட்டுமல்ல
ஆண்களுக்கும் உண்டு
இனக்கவர்ச்சி

காதலுக் காமமும் இருபாலருக்கும்
பொதுவானது - அதில்
ஆண் என்ன?
பெண் என்ன?

பகலும் இரவும் இணைந்ததுதான்
ஓர் நாள் என்பதை யாரால்
யாரால் மறுக்க முடியும்?
மறுத்தால் அவர் முட்டாள்!

எடைக்கு எடை சமன் செய்வதுதான்
சரியான தராசு - அதில்
ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும்
சரியாய் வைத்து எடை போடு!

எழுதியவர் : கிச்சாபாரதி (22-May-16, 12:01 pm)
Tanglish : saman seithu paar
பார்வை : 75

மேலே