புள்ளியில் ஒரு புள்ளி

எந்த தேசம் சென்றாலும்
விடாமல் பின் தொடர்ந்து வரும்
ஒரு நிழலாய் இந்த சாதி வெறி

அந்த இருளுக்கு தினமும் பயந்து
மனிதத்தை மறக்கலாமோ?

மனிதனுக்குள் இருந்த
ஒரு நிசப்தத்தைக் குளைக்கலாமோ?

வீட்டிற்கு வெளியில்
ஒரு சாதிச்சுவர் முளைக்கலாமோ?

உன்னொருவன் சுய நலத்திற்காக
ஒரு சாதிக்கலவரத்தை விதைத்து
மனிதனை மனிதன் கொன்று புதைக்கலாமோ?

மாற்றத்தை ஏற்க மறுத்து
ஏமாற்றத்தைப் பெறுவது இலாபமோ?

படிப்படியாய் முன்னேறாமல் - மாறாய்
தலைகீழாக நீ சறுக்கி விழுவதுதான்
உன் வளர்ச்சியாகுமோ?

வட்டத்திற்கு வெளியே கொஞ்சம்
தாவி குதித்து வந்து பார்...
பரந்து விரிந்த இப்பூமியில்
நீ எவ்வளவு சிறிய புள்ளி என்பதை
தெளிவாய் உணர்வாய்...

எழுதியவர் : கிச்சாபாரதி (22-May-16, 12:47 pm)
Tanglish : pulliyil oru pulli
பார்வை : 61

மேலே