மணல்வாரி Measles

காய்ச்சல் ரொம்ப அடிக்குதே,
கண்ணும் சிவந்து இருக்குதே!
உணவு உண்ண முடியலையே,
வாயும் ரொம்ப வலிக்குதே!

மணல்வாரி அம்மையாம்,
மல்லாந்து படுத்தாலும் எரியுதே!
முகம், நெஞ்சு, முதுகிலும் பொரிப்பொரியாய்
காணுதே! காய்ச்சல் வேறு அடிக்குதே!

வெயிலும் ரொம்ப இருக்குதாம்,
விளையாடப் போகக் கூடாதாம்!
அம்மை இறங்க வேண்டுமாம் – தலைக்கு
த்ண்ணி விட்டதும் தாராளமாய்ப் போகலாம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-May-16, 7:07 pm)
பார்வை : 416

மேலே