மரப்பாச்சி
கருவில் வெளிப்பட்டு
தெருவில் விளையாடும்
மழலைக்கு நீயும் ஒரு
விடலை என்பது
விளையாட்டில் தெரியும்!
எல்லாம் அறிந்த
முதிய இளைஞனின்
புதிய வெளிப்பாடு!
பிறந்த மேனியோடு
சிறந்த கலைவடிவில்...
மறந்த நம் பண்பாடு
நினைவுக்கு வருகிறது!
தொட்டில் குழந்தைக்கு பிறந்த
இன்னொரு தொட்டில் குழந்தையென்று!