புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - சிவரஞ்சனி

கவியரசு கண்ணதாசன் எழுதிய தனிப்பாடல்களில் மிகவும் அருமையான ஒரு பாடல்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் டி.எம்.சௌந்தரராசன் 'சிவரஞ்சனி' ராகத்தில் பாடியிருக்கிறார். யு ட்யூபில் கேட்டு மகிழலாம்.

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்)

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் (புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன்கை கொடுத்தான் - அன்று
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் (புல்லாங்குழல்)

எம்.எஸ்.விஸ்வநாதன் தான் நடத்தும் மேடை இசை நிகழ்ச்சிகளில் முதல் பாடலாக கவியரசரின் ’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ பாட்டைப் பாடித்தான் ஆரம்பிப்பாராம். இசை நிகழ்ச்சியை முடிக்கும் போதும் ’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்’ என்றுதான் முடிப்பாராம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-May-16, 8:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 466

மேலே