எங்கே இருகிறாய்
எங்கே இருக்கிறாய்
என் இனியவளே.....
வெற்றிடமாய்
வாழ்கிறேன்.....நீ
சென்று
வாழ்கின்ற இடம்
தெரியாமல்......!!
வலிகளை தந்தவள்
நீதானே....அதை
தாங்கி வாழ்பவன்
இவன்தானே.....
உன்னிடமே சொல்லி
உன்னிமடி
சாய்ந்திடவே
என்னுயிர் என்னோடு
இன்னும்.....!!
நிஜமாக வாழ
ஆசைப்பட்ட
உள்ளத்தை.....உன்
நிழலில்
கூட வாழமுடியாத
கஷ்டத்தை
ஏன் எனக்கு
தந்தாய்.....?
மழைக்கு காத்திருக்கும்
காய்ந்த
பூமி போல.....உன்
வரவிற்காக
என்னுள் உன்
காதல் காத்திருக்குது.....!!
கரை தேடும்
கடல் அலை நுரைகள்
அடித்து அடித்து
அழிந்து போகும்.....
ஆனாலும்
அடங்கிடாத
அதன் தேடல்.....அதைத்தானே
ரசிப்போம்....அதுபோல
உன் நிழல்
தேடும் நிஜம்
நான்.....!!
எல்லையற்ற
வசந்தம்
என்வாழ்வில்
வீசும்....என்
சொந்தமென்று
நீ வந்தால்.....!!
அழகான
தவறுகளை
அவ்வளவு அழகாய்
ரசித்தவளே.....
ஏனடி இன்று
இத்தனை அவலம்
என் வாழ்வில்?
தவறும் தவறும்
சேர்ந்து.....
கதறி
அழுகிறதே....
தவறிப்போன
காதல்
வாழ்க்கையால்.....!!