சொல்லிவிடு வெண்ணிலவே

என்னவளே நீ
சுகங்கள்
பல நூறு தந்தாய்...
வலிகளும்
பல நூறு தந்தாய்......


உன்
நினைவுகளிலே
என் நாட்கள்
மின்சார இரயில்களாய்......


உனைப் பார்த்து
காதல் கொஞ்சும் மொழிகள்...
கெஞ்சும் கேள்விகள்...
நீ தரும் மௌனத்தில்
என் பயணம்
நிமிட முட்களாய்......


எத்தனை
முறையோ?...
மௌனத்தால் நீ
எனை
காயப்படுத்தியது......


வலிகள்
அதிகந்தான்...
உன் வதனப் புன்னகையில்
ஆறிடாதோ?...
என் காயங்கள்...
ஏங்குகிறேன்
நீயோ?...
முகம் திருப்புகிறாயே......


உன் ஒரு மொழி
இதழ் வழி
கேட்க
என் ஜென்மங்கள்
போதாதோ?...
சொல்லிவிடு வெண்ணிலவே......

எழுதியவர் : இதயம் விஜய் (28-May-16, 6:43 pm)
Tanglish : sollividu vennilave
பார்வை : 483

மேலே