இயற்கை
ஏடுகளை அரித்து
உண்ணும்
கரையான்களைப் போல்..
நாட்டினை அரித்து
உண்ணும்
அரசியல்வாதிகளால்...
இயற்கையும் அழிந்தது..
வளங்களும் அழிந்தது..
இறக்குமதி
ஆள்வதுமேன்..
கம்பும் கேழ்வரகும்
காலை உணவாய் இருந்தது
போய்..
கால்சியமும் வைட்டமினும்
புட்டிகளில் வந்ததுவே...
வேப்பமரம் இருப்பதனை
மறந்துவிட்டு
வேம்பும் உப்பும்
வேண்டுமென்றோம்..
பற்பசையில்..
பார்த்திருக்க
பறி கொடுத்தோம்...
பல்லாயிரம்
படிமங்களை...
இப்போதும்
இயங்கவில்லையேல்...
இழந்திடுவோம்...
இயற்கைதனை....