ஆழ் கடலே ஆறு
உச்சி வெளுத்தும் உருகி வந்து
காத்தவளும் நீதானே!
முக்காடிட்டு அழுது புலம்பி
கண்ணீர் விட்டு காத்து
அரவணைத்தவளும் நீதானே!
மலையில் குதித்து விளையாடி
வெள்ளி மாலையென காட்சிதந்து
மகிழவைத்தவளும் நீதானே!
வளைந்து நெலிந்து நடந்து வந்து
அன்னையாய் மாந்தரை அணைத்து
அமுது படைத்தவளும் நீதானே!
அலையென அசைந்து ஆடிவந்து
தொட்டுதொட்டு ஓடி மறைந்து
கண்ணாமூச்சி காட்டி சிரித்து
மகிழ்ந்தவளும் நீதானே!
பின் ஏனிந்த கடுங்கோபம்?
வெகுண்டெழுந்து ஊர் புகுந்து
ஆயிரமாயிரம் உயிர்களை வாரி எடுத்து
அள்ளி புதைத்து அழித்தவளும் நீதானே!
கொண்டவன் மாண்டானா?..இல்லை
குடித்து வந்து அடித்தானா?
நீ என்ன கண்ணகியோ?..இல்லை
சுனாமி கொடுத்து கொல்ல
எடுத்த உயிர்களனைத்தும்
என்ன பெண் சிசுக்களோ?
நெஞ்சு பதைக்குதம்மா!