காலம் மாறிப்போச்சு

வாள்வெட்டுக்
கலாச்சாரத்தால்
பாழ்பட்டு
நிற்குது
நம்ம யாழ்.....
நகர்....!!

ஊருக்குள்
முளைத்த
உருப்படாத
ஒரு கூட்டம்....
ஒவ்வொரு நாளும்
எங்கேயோ
ஒரு
கொலைவெறியாட்டம்.....!!

தமிழன் பேர்
சொன்ன
ஊர் இன்று....
தலைகீழாக்கிப்
போனது.....
தரணி பாடுவோம்
என்று
தாயக கானம்
பாடிய..... உள்ளங்கள்
ஆலுமா டோலுமா
என்று
அவிழ்த்துப் போட்டு
ஆடுது......
குடித்துவிட்டு......!!

நீதவான்
இளம்செழியன்
எடுத்துள்ள
சட்ட ஒழுங்குகள்
கூட
கவனிக்காமல்
இந்த சமூகம்
தவறுமானால்.....தவறு
எல்லோருடயதுமே.....!!

திரைப்பட நாயனின்
பதாகைக்கு
பாலூற்றும்
கலாச்சாரம் முதல்
திரைப்பட
காட்சிகள் தரும்
பிரதிபலிப்புகள்
வரை
எல்லாம்.....சர்வசாதாரணமாய்
நிகழ்கின்ற
அவலம்
கண்கூடாய்
கண்டோம்.....!!

நம் உழைப்பின்
பாதியை
உறிஞ்சிய
பிள்ளைகள்.....ஊதாரியாய்
அயல்நாட்டு
மோட்டார் வண்டி
வாங்கி.....உழைப்பை
மறந்து
உலகம் ரசிக்குது.....!!

எழுதியவர் : thampu (31-May-16, 5:24 pm)
Tanglish : kaalam maarippochu
பார்வை : 161

மேலே