தினம் ஒரு தத்துவ பாட்டு - 1 4=121
ஆகாயம் அழுவதற்கு ஆதாரம் தேவையில்லை…
ஆதாயம் அடைவதற்கு ஆரூடம் தேவையில்லை
அதிகாலைப் பொழுதுகள் ஆக்ரோஷம் அடைவதில்லை
ஆலமர விழுதுகள் பாரம்தாங்க அழுவதில்லை….
மின்மினி பூச்சிக்கு மின்சாரம் தேவையில்லை
இயற்கை காட்சிக்கு அரிதாரம் தேவையில்லை
விந்தைமிகு ஆட்சிக்கு விளம்பரம் தேவையில்லை
தந்தையின் மாட்சிக்கு டமாரம் தேவையில்லை
பல்லக்குத் தூக்கிகள் செல்வாக்கு அடைவதில்லை
செல்வாக்கு இல்லையெனில் நல்வாக்கு கிடைப்பதிலை
உள்நாக்கு குத்திக்கொண்டால் உணவுகள் கொள்வதில்லை
உணவுக்கு பஞ்சம் வந்தால் எழவுகள் கொஞ்சமில்லை….
ஏமாற்றம் இல்லாத வாழ்க்கைகள் எங்குமில்லை
தடுமற்றம் கொள்ளாமல் ஏற்றங்கள் என்றுமில்லை
மனமாற்றம் அடையாத மனிதர்கள் யாருமில்லை
இனப்பெருக்கம் செய்யாமல் மண்ணுயிர்கள் இருப்பதில்லை
பக்தர்களின் பக்திக்கு பகாவான்கள் பஞ்சமில்லை
பகலவனின் சக்திக்கு பயன்கள் கொஞ்சமில்லை
முனிவனின் முக்திக்கு மூடுபனி வஞ்சமில்லை
படித்தவனின் மூளைக்கு மூடுவிழா அஞ்சலியில்லை
கவிகளின் கற்பனைக்கு வார்த்தைகள் போதவில்லை
கூலிகளின் உழைப்புக்கு ஊதியங்கள் பெருசாயில்லை
இளைஞனின் திறமைக்கு ஊக்கங்கள் உடனேயில்லை
முதுமையின் தளர்ச்சிக்கு நோய்கள் குறைவேயில்லை
.
வளமான வாழ்வுக்கு நேர்மை சுலபமில்லை
அன்பான பேச்சுக்கு அடிமை சுலபமில்லை
திடமான நெஞ்சுக்கு பொறுமை சுலபமில்லை
சுகமான உறவுக்கு சுமைகள் சுலபமில்லை
கணினி உலகத்தில் கால்களுக்கு ஓய்வேயில்லை
ஓய்வுக்கு இடம் கொடுத்தல் உயர்வதற்கு வழியேயில்லை
எதற்கும் துணிந்தவனுக்கு தோல்விகள் முற்களில்லை
முள்மீது நடப்பவனுக்கு வெற்றிகள் தொலைவிலில்லை .