மதி முன்னதாகவே

கையிலே ஆயிரம்
ஒரு வெகுமதி.

மண்ணிலே வைரம்
ஒரு பெருமதி.

கண்ணிலே கனிவு
ஒரு முழு மதி .


மனதிலே அன்பு
ஒரு வளர்மதி.


திருத்தமாக வாழ்தல்
ஒரு புத்திமதி.

எங்கும் யாவும்
மலர்வது திருமதி.


எதிலும் யாவையிலும்
தென்படுகிறது அமைதி.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (1-Jun-16, 12:08 pm)
பார்வை : 886

மேலே