எழுத்து நயம் பார்க்கும்

எழுதினால் தான்
சிரமம் தெரியும்
எழுதும் போதே
பிழைகள் மலிந்து
வரும்.

உற்று நோக்கின்
தப்புக்கள் மாளா
திருப்பிப் பார்க்கின்
பொருள் மாறும்.

எழுதுவது எளிது அல்ல
பழகப் பழக கை வரும்
மன ஓட்டம் கை ஓட்டம்
ஒன்றுபட்டால் எழுத்து
நயம் பார்க்கும்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (31-May-16, 7:26 pm)
பார்வை : 383

மேலே