நீண்டபுணரல்
பின்னிய கால்களை
பிரிக்க மனமின்றி
அப்படியே கிடக்கிறாள்...
அக்குளுக்குள் புதைந்த
முகத்தை நிமிர்த்த
முயற்சிக்கவேயில்லை...
மார்புகளில் பதிந்த எச்சில்
ஈரங்கள் காய்வதை அவள்
விரும்பவில்லை...
அறைக்குள் எதிரொலித்த
முணங்கலை
அவள் பிதற்றுகிறாள்...
கண்களில் வழிந்த
திறவின் கசிதல் ஆத்மாவைத்
துளைக்கிறது...
அடிவயிற்று பிசுபிசுப்பை
உணர்ந்தபடியே அவன்
வாசத்தை நுகர்ந்தே கிடக்கிறாள்...
அவன் சூடு மெல்ல
இறங்குவதை உணர்கையில்
நகராமல் துடிக்கிறாள்...
எப்படியாவது முழுக்க வடிந்து
விடட்டும் என்ற பத்து வருட
குழந்தை ஏக்கம் எக்கிக் கொண்டிருக்கிறது....
புணர புணரவே இறந்து
போனவனின் விந்து என்னாகும்
என்ற கேள்வியோடு
அந்த இரவு நீள்கிறது....
- கவிஜி