நண்பர்களைத் தேர்ந்தெடுக்க எச்சரிக்கை தேவை

இன்று நடக்கும் அரசியல் கொலைகளின்
முன்னோடி ஜூலியஸ் சீசர் கொலை!

பகைவர்கள் மட்டுமில்லை, திட்டமிடலும்,
நண்பர்களும், புரூடஸும் உடந்தை!

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பத்திரிகையில்
அறிய வருகிறோம் அரசியல் கொலைகள்!

ஆதாயக் கொலைகள், ஆணவக் கொலைகள்;
அங்கங்கே காண்கிறோம்; நட்பு ஆராயுங்கள்!

மதுபான போதையில், பணம் தரவில்லை
என்ற வெறுப்பில் தாயும், தந்தையும் கொலை!

நட்புடன் பழகவும், நண்பர்களைத்
தேர்ந்தெடுக்கவும் தேவை எச்சரிக்கை!

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு. குறள் 793 நட்பாராய்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jun-16, 9:16 pm)
பார்வை : 65

மேலே