ஆதியின் கூடுகள் - காதலாரா

ஆதியின் கூடுகள்
~~~~~~~~~~~~~~

எனைக் கொன்றச் சுவடுகளை
எத்தனை முறை அழிப்பினும்
காடுகளின் கர்வம் கவ்விய
மீசை முட்களே முளைக்கும்...

உன்னுருவம் குடித்த உதட்டில்
தென்துருவம் வெடித்து வீழினும்
வெளிகளின் பருவம் திரட்டிய
ஆதியின் கருவே உதிக்கும்...

நிலம் விழுங்கிய அலைகளில்
முகம் அணிந்து நிற்பினும்
திசைகளின் விழிப் பறித்த
கார்முகில் கலமே மிதக்கும்..

நிறம் அழித்த இதழ்களின்
வரம் உரித்துச் சூடினும்
கூந்தல் தேர் சாய்த்த
மின்மினி கவிதைப் பறக்கும்...

புதுவித ஒளியின் சுடரை
மறைமுக சுழலில் அடைப்பினும்
ரிக்வேத மொழிப் படித்த
ஆரிய பூதம் பிறக்கும்...

நிலவை உடைத்தப் பிளவுகளில்
கருகிய கடவுளைப் புதைப்பினும்
ஜென்மம் பின்னும் புணர்வில்
ஆதாம் ஏவாள் ஜனிக்கும்....

- காதலாரா..

எழுதியவர் : காதலாரா (இராஜ்குமார் ) (2-Jun-16, 12:30 am)
பார்வை : 103

மேலே