மாமா என்ன தூக்கிட்டு வரும்போது ஊர் கண்ணே உங்க மேல தான் பட்ருக்கும் உங்களுக்கு முதல்ல சுத்திபோடணும் கைல துப்புங்க மாமா இல்லடி உன் மேல தான் கண்ணுபட்ருக்கும் நீ என்னைக்கும் அழகு தாண்டி இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க இப்படியே கண்ணு வச்சு கண்ணு வச்சு தான் உன்ன சீக்கிரமா அனுப்பிட்டாங்களேடி அத விடுங்க மாமா அதான் நாம ஒன்னா சந்தோஷமா இருக்கமே யார் நெனச்சாலும் நம்மள பிரிக்க முடியாது மாமா

நான் செத்தா
எனக்காக என்ன பண்ணுவ
ஒரு சொட்டு கண்ணீர் விடுவியா?
என்ன கட்டிபிடிச்சி அழுவியா?
உன் மடியில போட்டு தாலாட்டு பாடுவியா?
என்ன யார்னு கேக்கமாட்டல்ல
என்ன மறக்கமாட்டல்ல
என்ன நெனைப்பியா
என்ன கழுவும் போது
கட்டி புடிச்சிபியா
எல்லாரையும் போக சொல்லிட்டு
புடவையே நீயே கட்டுவிடுறியா
என்ன எடுக்கும் போது
என் பின்னாடியே
ஓடி வருவியா
என்ன புதைக்றதுக்கு| எரிக்றதுக்கு முன்னாடி
என் நெத்தியில முத்தம் வைப்பியா
கதறி அழுது
என் மேல விழுந்து
மயக்கமாவியா!
எழுந்து என புதைக்றத
பாக்க முடியாம
துடிப்பியா
உன்ன எல்லாரும் புடிச்சிப்பாங்களா!
புடிக்கலன
நீ என் கூடவே
உடன்கட்டை ஏறிடுவியே..
என்ன புதச்சிட்டு எல்லாரும் போனாலும்
நீ மட்டும்
என் பக்கத்துல படுத்துகிட்டு
என்ன கட்டிபிடிச்சி அழுவியா
என்ன எழுந்திருடி
சொல்லுவல்ல
எழுந்திருக்கலனா
என்ன நோண்டி
எனக்குள்ள குதிச்சி
நம்மல மூடிடுவியா
ஆமாம் அப்டி தான்
பண்ணுவன் டி
நீ எங்கூட என் கைய பிடிச்சு
எழுந்து வரலன்னா
(உன்னால நடக்க முடியலன்னா சொல்லு
நான் தூக்கிட்டு ஊர் வலம் வருவன்.
அதான் தூக்கிட்டு வந்துட்டியேடா
என் பொண்டாட்டிய
நான் பாடைல
படுக்க விடமாட்டன்
நானே தூக்கிட்டு வரனு
நாம ஒன்னா கலக்கும் போது
பிடிச்ச கைய இப்ப
வரைக்கும்
அதே பாசத்தோட பிடிச்சிட்ரிக்கியே
இது போதும்னு சொல்ல தோணல
ஆனா நீ துடிக்றத என்னால
பாக்க முடியாதுடா
உன்னால மட்டும் தான் முடியும்
என் கைய இருக்க பிடிச்சிகிட்டு
நெஞ்சுல என்ன சுமந்துகிட்டு
மடியில வாங்கிக்க )
நீ எழுந்து வரலனா
உன்னில் விழுந்துடுவன் டி
நீ என் மேல விழறதுல எனக்கு எந்த வலியும்
இல்லடா
உனக்கு மூச்சு முட்டி துடிப்பியேனு
தான் வருத்தமா இருக்கு
லூசு பொண்டாட்டி
நீ இல்லாம மேல இருக்கறப்ப தான் இதுலான் நடக்கும்
(நடக்குது)
உன் கூட இருக்கும்போது
என் உயிரோட இருக்கும்போது
என்னோட மூச்சு கூட இருக்கும் போது
சந்தோஷமா படுத்துடுவன் டி
சரி
உனக்கு என்ன தோனுதோ
அத பண்ணு
உங்கூடவே தான் இருக்கன்
உன்ன நான் பாத்துபன்
என்ன எரிச்சிருந்தா
என்ன பண்ணியிருப்ப
அப்பயே உங்கூட எரிஞ்சிருப்பன்டி
எத்தன பேரு வந்தாலும்
எல்லாரையும் அடிச்சி
தள்ளிட்டு
உங்கூட வந்திருபன்டி
அப்பயே பாத்தியா
நான் குழிக்குள்ள விழுந்துட்டன்
லூசு பசங்க தூக்கிட்டானுங்க.
இவ்ளோ (அஞ்சுநிமிஷம்) நேரம்
Waste ஆகிர்காது.
நான் நீ இறக்கும்போதே
இறந்திட்டுருப்பன் தெரியுமா
உனக்கு பால் ஊத்துனு சொல்லும் போதே நான் நடைபிணம்.
நீ தான் எங்கிட்ட
என் காரியம் எல்லாத்தையும் முன்னயிருந்து நடத்தி வைக்கணும்னு சத்தியம் வாங்கிட்ட.
எனக்கு தெரியும்டா
உன் முகத்த பாக்கும்போதே தெரிஞ்சிகிட்டன்
அதனால தான் அப்டி ஒரு சத்தியம் வாங்கனன்.
ஏன்டி என்ன உயிரோட கொன்ன
நீ இல்லாம என்ன தனியா தவிக்க விட்ட
ஒரு அஞ்சு நிமிஷம் தானே மாமா
உனக்கு தான் அது 5 நிமிஷம்
அது எனக்கு ஒரு யுகம் மாதிரி இருந்துது
அப்பா சாமி
நீ என் மேல பயங்கர பாசம் தான்
நான் தான் உனக்கு
எப்டிருந்தனு தெரியல
உன்ன விட்டு என்னால
இருக்க முடியலனா
உன் அன்பு எந்த அளவுக்கு
என்ன உன்னோட
கட்டிபோட்ருக்குனு
உனக்கு தெரியலயாடி
இவ்ளோ பாசம் நான்
உன்மேல வைக்றனா
அப்ப உன் பாசம்
எவ்ளோ ஆழமானாதா இருக்கும்.
உன் பாசத்துக்கு அளவே இல்லடி
நம்மை பிரிக்க முடியாதடி
~ பிரபாவதி வீரமுத்து