பிறரை நேசிக்கப் பழகு

துன்பம் வரும் வேளையிலும்
பிறரை நேசிக்கப் பழகு!

நீ உன் வேலையையும், கடமையையும்
பலனை எதிர்பாராமலே செய்யப் பழகு!

மகிழ்ச்சியான தருணங்களில்
கூச்சமின்றி ஆனந்தக் கூத்தாடு!

பாட்டுப் பாடு! உலகமே இன்பமயம்,
வாழ்ந்து காட்டு!

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு. - திருக்குறள் 74 அன்புடைமை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jun-16, 9:27 pm)
பார்வை : 160

மேலே