மணல்வாரி
குழந்தை உடம்பில் அரிப்பு,
பொரிப் பொரியாய் தெரிகிறது,
சிகப்பு சிகப்பாய் தடிக்கிறது,
முகம் மார்பு முதுகிலும் கூட!
எரிச்சலில் ஒழுகும் மூக்கு,
அடிக்கடி தும்மலும் வருகிறது,
உடலும் காய்ச்சலில் சுடுகிறது,
கண்களிரண்டும் சிவப்பதுவும் கூட!
உணவு விழுங்க முடியவில்லை,
இது ஒவ்வாமையோ! வேறெதுவோ!
உள்வாயில் வெண்புள்ளிகள்!! – ஆம்
இது மணல்வாரியின் அறிகுறி!
குறிப்பு:
மணல்வாரி - Measles
வெண்புள்ளிகள் – Koplik spots
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
