தடைகளை தகர்த்தெறி

மனிதன் இப்பூவுலகில் தோன்றி பல்லாயரக் கோடி வருடங்கள் கடந்து விட்டது.அந்த நாள் முதல் இந்த நாள் வரையிலும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் கண்டுபிடித்துக் கொண்டு தான் இருக்கிறான்.சிலரின் கண்டுபிடிப்பு உலகம் அறிந்து பல தலைமுறைகள் கடந்து புகழ்பெறுகிறது.ஆனால் பலரின் கண்டுபிடிப்புகள் வீட்டு வாசல் படியையே தாண்டுவதில்லை.

உலகில் புகழ்பெற்ற அனைத்து கண்டுபிடிப்புகளுமே பல தடைகளை உடைத்து வந்தவையே. ஏனெனில் தடைகள் இல்லாமல் எந்த ஒரு முயற்சியும் வெற்றியடையாது.ஒரு செயலை முடிக்க ஆயிரம் முயற்சிகள் எடுத்தால் அதல் குறைந்தது நூறு தடைகளாவது இருக்கும்.இருக்கும் தடைகளை உடைத்து முன்னேறி செல்பவனே வாழ்வில் வெற்றயடைவான்.ஆனால் தடைகள் எந்த ரூபத்தில் வரும் என்பது யாருக்கும் தெரியாது.


சிலரின் முயற்சிக்கு அவன் வாழ்வில் முக்கியமான ஒருத்தரே ஊண்டுகோலாக இருப்பர்.சிலரின் வாழ்வில் முக்கியமானவர்களே தடைகளாக இருப்பர்.தடைகள் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை. எவ்வித தடையுமின்றி கிடைக்கும் எந்த ஒரு பொருளும் வாழ்வில் நிலைக்காது.ஏனெனில் தடையின்றி கிடைக்கும் பொருளின் அருமை கிடைத்தவனுக்கு தெரியாது.


நினைத்த காரியத்தை நிறைவேற்றும் முன் ஆயிரம் தடைகளும் வரலாம்,ஆயிரம் தோல்விகளும் வரலாம்.ஆனால் தோல்வியை கண்டு எந்த ஒரு காலத்திலும் அஞ்சுதல் கூடாது. தோற்க்கும் ஒவ்வொரு முறையும் தடைகளை எதிர்த்து போரிட வேண்டும்.தடைகளுக்கும் உனக்குமான யுத்தத்தில் ஒருபோதும் தடைகள் வெற்றி பெற கூடாது.ஆயிரம்முறை வீழ்ந்தாலும் ஆயிரம் முறையிலும் எழுந்து நின்றிட வேண்டும்.


உன் வாழ்வில் தோல்வி உன்னை வென்றுவிட கூடாது.ஆயிரம் முறைதோல்வி உன்னை வென்றால் ஒரு முறையாவது தோல்வியை நீ வெல்ல வேண்டும். நீ வெல்ல தடையாக எது இருந்தாலும் அதனுடன் எதிர்த்து போரிட்டு தகர்த்து எறிந்திட வேண்டும்.ஆயிரம் தடைகளை தகர்த்தால் ஒரு வெற்றியினை கண்டிடலாம்.

உன் வெற்றியை ஓர்நாள் உலகம் பேசும்.



தடைகளை தகர்த்தெறிந்திடு !
வெற்றிகளை கண்டிடு !

எழுதியவர் : புகழ்விழி (4-Jun-16, 12:26 am)
சேர்த்தது : புகழ்விழி
பார்வை : 619

மேலே