குடை பிடித்த வானவில்

அந்த புறாக்களுக்கு
தோகையிருந்தது
உன் வீட்டிலிருந்து
வந்த பிறகு...

*

என்னைப் பற்றிய
உன் புழுகுகள்
நம் காதல் சின்னங்கள்...

*

உன் ம்ம்ம்ம்ம்ம்களில்
பெயர்ந்து கிடக்கிறது
ஒரு நாவலின் சங்கதி...

*

நீ வரும்
மழையில் மட்டும்
குடை பிடித்த
வானவில்

*

உன் நினைவு
பெருங்காட்டில்
தொலைந்த
ஒரு துளி மழை நான்...

*

எழுதியவர் : கோபி சேகுவேரா (4-Jun-16, 8:27 pm)
பார்வை : 110

மேலே