ருசிக்காரி -சந்தோஷ்

நீ செய்துக் கொடுத்த
வத்தல் குழம்பில்
உன் வாசனை.
உன் ருசி..
----
உன் சுண்டுவிரல் போல இருப்பாதாலே
வெண்டைக்காயை
மெலிதாக கடித்தே சாப்பிடுகிறேன்.
--
ஏய் கள்ளி!
பீட்ரூட்டில் எப்படி
உன் உதட்டுச்சாயம் ?
--
அடடே...!
உன் உதட்டில் பட்டு
தவறி விழந்த
ஒரு சோற்றுப் பருக்கைக்கு
இத்தனை எறும்புகளா
என்னோடு
போட்டி போடுகிறது .!
--
இனி ,
எனக்கான விருந்தின் போது
இனிப்பு பலாகாரம் வேண்டாம்.
ஒரு முத்தம் பதித்து
வாழை இலை போடு போதும்..!
-
**
இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (4-Jun-16, 8:28 pm)
பார்வை : 98

மேலே