தாலாட்டு

தாலாட்டு

(மனசாட்சியின் தாலாட்டு... மக்களுக்காக...)

ஆரா ராரிரோ.... எல்லாம் எங்கே போனீரோ...
ஆரா ராரிரோ.... உள்ளம் கொன்றே போனீரோ....

உறங்குவாய் பொது ஜனமே..
வணங்குவேன் உனை தினமே.. (2)

நமக்கென்ன கிடைக்கு மென்று இருக்கின்ற தமிழ்நாடே
கிடைப்பதும் ஓசியெனில் வாய் பிளக்கின்ற தமிழ்நாடே
வருங்காலம் மறந்துவிட்டு கனவினில் வாழ்பவரே
கண்ணைமூடி தூங்கிடுவாய் உனக்கென்ன கவலையிங்கு

உறங்குவாய் பொது ஜனமே..
வணங்குவேன் உனை தினமே.. (2)

ஏழை படும் பாடுபற்றி பத்திரிக்கை படித்திடுவாய்
விவாதத்தில் கலந்து கொள்வாய் வாயில்மட்டும் சேதிசொல்வாய்
மறுநாள் விடிந்தபின்னே உன்வேலை பார்த்துச்செல்வாய்
கண்ணைமூடி உறங்கிடுவாய் உனக்கென்ன கவலையிங்கு

ஆரா ராரிரோ.... எல்லாம் எங்கே போனீரோ...
ஆரா ராரிரோ.... உள்ளம் கொன்றே போனீரோ....

உறங்குவாய் பொது ஜனமே..
வணங்குவேன் உனை தினமே.. (2)

இயற்கை அழித்திடுவாய் ஊடகத்தில் மரம் வளர்ப்பாய்
மொழிபற்றி பேசிடுவாய் மாறு வேடம் போட்டிடுவாய்
கண்முன்னே தவறுகண்டும் உன்வழியே நடந்திடுவாய்
கண்ணைமூடி தூங்கிடுவாய் உனக்கென்ன கவலையிங்கு

உறங்குவாய் பொது ஜனமே..
வணங்குவேன் உனை தினமே.. (2)

திருந்திட மனசுயில்லை உனக்கு வருந்திட நேரமில்லை
அருந்திடு மதுவைமட்டும் புரிந்திடு அழிவு எட்டும்
மறந்திட்டாய் வாழ்வைவாழ இருந்திட்டாய் ஜடத்தைபோல‌
கண்ணைமூடி உறங்கிடுவாய் உனக்கென்ன கவலையிங்கு

ஆரா ராரிரோ.... எல்லாம் எங்கே போனீரோ...
ஆரா ராரிரோ.... உள்ளம் கொன்றே போனீரோ....

உறங்குவாய் பொது ஜனமே..
வணங்குவேன் உனை தினமே.. (2)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Jun-16, 1:58 pm)
பார்வை : 533

மேலே