உணவு விடுதிகள்

சிறியதும் பெரியதுமாய் வகைவகையாய்
ஊரெங்கும் பார்த்திடலாம் அளவளவாய்
மணம்பரப்பி நம்மையுள்ளே அழைத்திடுமே
பசிபோக்க பலவுணவும் அளித்திடுமே

பிரமாச்சாரி அனைவருக்கும் இதுதுணையே
தொடர்ந்தே இங்குஉண்டுவந்தால் அதுவினையே
பாரம்பரிய உணவுகளும் வழங்கிடுமே
வெளிநாட்டு உணவுவகை கிடைத்திடுமே

நல்லசுவை ருசியென்றால் கூட்டம்கூடும்
நியாயமான விலையுமென்றால் பேரும்சேரும்
வீட்டின்ருசி கிடைக்குமென்றால் சிறந்ததாகும்
உணவுவிடுதியில்லா ஊரைக்காண்பது அறியதாகும்

பெரியவகை உணவகம்சில போனதுண்டு
புரியாத பலஉணவுவகை அங்கேயுண்டு
வயிறுகொள்ள‌ உண்டபின்னே பில்லைப்பார்த்தால்
வரிகள்போட்டு தலையில்துண்டும் போட்டிடுவ‌ர்

சாலையோர தள்ளுவண்டி கடைகளுண்டு
பிடித்துவிட்டால் நாளும்பொழுதும் விடியுமங்கு
சட்டினியும் சாம்பாரும் குடிக்ககிடைக்கும்
தினுசுதினுசாய் குழம்புகளும் ருசிக்ககிடைக்கும்

பலபேரின் பசிபோக்கும் உணவுவிடுதி
சமைக்கத்தெரியா மக்களுக்கு உறுதுணையே
நாளுமிவை நாடெங்கும் பிறக்குதென்றால்
சமைக்கபிடிக்கா மக்கள்குணம் காட்டிடுதோ..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Jun-16, 1:59 pm)
பார்வை : 359

மேலே