வேலை செய்வது அவ்வளவு நல்லது

வேலை செய்வது அவ்வளவு நல்லது!!!
===============================
Kovai Ganesh
டி.வி சீரியலுக்கு நேரம் ஒதுக்கும் நம் பெண்களில் பலர்,உடற்பயிற்சிக்கு நேரமே ஒதுக்குவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால் பெண்கள் தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதனால் உடல் எடை குறைவது மட்டுமல்ல,மெண்டல் ஸ்டிரெஸ்,டென்ஷன் போன்றவையும் மறையுமாம்.
இதைவிட ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால்,இளவயதில் குனிந்து,நிமிந்து வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு,வயதாகும்போது,ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பல பிரச்னைகள் வராதாம். அல்லது வருவது தள்ளிப்போடப்படுமாம்.
அதனால்,உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று புலம்புபவர்கள் குறைந்த பட்சம் தொட்ட வேலையையாவது நன்கு செய்யுங்கள்.
அதுவே சிறந்த உடற்பயிற்சி என்றும் மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள்
.
குறிப்பு: இது ஆண்களுக்கும் பொருந்தும்
நன்றி: முகநூலில் கோவை கணேஷ்