மோனிஷாநட்சத்திரங்களின் வாழ்வுதனை கொய்து கொண்டிருக்கிறாள்கட்டுரை- கவிஜி

மோனிஷா...நட்சத்திரங்களின் வாழ்வுதனை கொய்து கொண்டிருக்கிறாள்...கட்டுரை- கவிஜி

ஒரு கெட்ட கனவைப் போல கடந்து வர முடியாத தூரத்தில்... அவளை அதே 18 வயதில்... என் பள்ளி நாட்களின் ஊடாக ரசித்துக் கொண்டு தான் இருந்தேன்.....இருக்கிறேன்.

குண்டு கண்கள்... கூர் நாசி.. கனத்த உதடு... கூந்தல்- காடு.... பொம்மை என.. நம்புவதை... இல்லை என சிமிட்டும்... உடல். மென்மையின் ஈரத்தில்.. மௌனங்கள் உடை படும் உடல் மொழி.... அற்புதங்களின் வனத்தில் தொலைந்து விட்ட தேவதையின் கனவைப் போல....பார்க்கும் விழிகளில்... பருவத்தை தூவிட்ட சுழல் தேசக் காரியாய்... நினைக்க நினைக்க நினைவில் மட்டுமே....

ஆனது.. 20 வருடங்கள்.....

எலும்பின் மிச்சம் கூட இருக்குமோ என்னவோ....இத்தனை கஞ்சத்தனம் கூடாது கடவுளுக்கோ.. எமனுக்கோ... காலத்துக்கோ.... நேற்று மீண்டும் பார்த்தேன்....

என்னை தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பெரும் என்னடி...
எனக்கு சொல்லடி.. விஷயம் என்னடி...
நெஞ்சத்தை தொட்டு பின்னிக் கொண்ட
கண்ணன் ஊரும் என்னடி...
எனக்கு சொல்லடி.. விஷயம் என்னடி...
அன்பே ஓடி வா.... அன்பால் கூடவா...ஓ....பைங்கிளி....

பார்த்துக் கொண்டே இருந்தேன்.... பார்க்க பார்க்க பரவசம்.... அவள் வசம்... மன வசம்... மரண வாசம்...

இந்தப் படத்தில்.... ஒரு பெட்டிக்குள் ஒளிந்து கொள்வதான காட்சி முடிவில்.. கண்கள் வெறிக்க இறந்து கிடப்பாள்.. அது காதலின் கசிவு.... இந்தப் படம் முடிந்த பிறகு ஒரு சாலை விபத்தில்.. அவள் செத்துப் போனது காலக் கசிவு.... கனவின் உடைத்தல்...இனம் புரியா சோகம் அப்பிக் கொண்ட வலைக்குள்... யாருமற்ற நிலையாக இளையராஜாவின் இந்தப் பாடல் மட்டுமே உயிரோடிக் கொண்டிருந்தது.. இசைக்க நுரைக்க ததும்பி வழியும்.. அன்பின் சுவடுகளாய் அவளின் முகம்... அத்தனை பேரழகை சிந்திக் கொண்டிருந்தது...

சொந்தம் பந்தம் உன்னைத் ...தாலாட்டும் தருணம்....
சொர்க்கம் சொர்க்கம் எனை சீராட்ட வரணும்...
பொன்னீ பொன்னீ நதி நீராட வரணும்...
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்...
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை...
நீ அள்ளித்தர தானாக வந்து விடு...
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை...
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு...

சிறகுக்கு.... சிறகு முளைத்த வயதுக்குள் அவளின் தத்ரூபங்கள்.... தவங்களின் நெகிழ்வாகவே எனக்கு பட்டது...விதி கடந்த அவளின் வெளி..... நட்சத்திரம் செய்வதாக நம்புகிறேன்..... காலத்தின் கதவுக்குள் அவளின் ஜன்னல்... திறந்து கொண்டே இருப்பதாக கற்பனை செய்கிறேன்....முதுமைக்குள் காலடி வைக்கும் நேரம் இது.. இளமையின் பிம்பமாய் இலைகளின் சூட்சுமமாய்.. ஒளிகளின் தூவலாய்..... அவள் எங்கோ மறைந்து கொண்டாள். அது தீரா தீர்க்கத்தின் நிறையை மீண்டும் மீண்டும்.... நான் பார்க்கும்.. இந்தக் காட்சிக்குள் நிரப்பிக் கொண்டேயிருக்கிறது.. யாருக்கு தெரியும்.. ஆன்மாவின் பயணத்தை சற்று நடை மாற்றி விடும் தீவிர சிந்தனைக்குள் அவள்.. காட்சி தரலாம்...

மோனிஷா...நட்சத்திரங்களின் வாழ்வுதனை கொய்து கொண்டிருக்கிறாள்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (7-Jun-16, 10:55 am)
பார்வை : 90

சிறந்த கட்டுரைகள்

மேலே