என்னை தெரியுமா•••
அவள் பார்த்த
பார்வைகள்
எதார்த்த பார்வை
தான் என்றிருந்தேன்
அது எதார்த்த பார்வையன்று
மிஞ்சின பதார்த்த
பார்வை என பிறகே தெரிந்து கொண்டேன்
எங்கெல்லாம் போகிறேனோ
அங்கெல்லாம் அவள் பார்வை என்மீது படுகின்றது
ஆண்கள் கழுத்திலும் மஞ்சள் கயிறு அணிவது
அவசியம் என நினைக்கிறேன்
அப்போது திருமணமானவன்
ஆகாதவன் என்பது தெளிவாகும்
யார் பின்னால் போகலாம் யார் பின்னால் போகக்கூடாது என்பது
தெரிந்து நடக்க உதவலாம் ஏனெனில் நான் திருமணமானவன்
என்பது அவளுக்கு தெரியாது எனவே
என் பின்னே வலையை வீசுகிறாள்
என்னை தெரிிந்து கொள்ளடி••