பாசதலைவனுக்கு தொண்டனின் சமர்ப்பணம்
தோல்வி.....
தொடர்ந்து முயல்கிறது – உனை
துவளவைக்க நிலை குலையவைக்க
துணிவுக்கு துணைவனான உன்னை
துணிவுடனே எதிர்க்கும் தோல்விக்கு – தலை
குனிவு மட்டுமே நிரந்திர பரிசு…
வெற்றி
வெறியுடன் முயல்கிறது
வெற்றிக்களிப்பை நின் முகத்தில் பார்க்க
முற்றிய ஞானி உனக்கு
வெற்றி ஏது தோல்வி ஏது??
93
நீ இன்னும் வாழப்போகும்
வருடங்களின் கணக்கோ?
மரணத்திற்கும் உனை பிடித்துவிட்டது
மார்போடு உனை அணைக்க மனமின்றி
மட்டற்ற ஆயுளை மறுக்காமல் நல்கிவிட்டது
திமுக
திமுகவின் மு.க மே நீ
கழகத்தின் கருணை நீ
ஏழையின் நிதி நீ
பொருத்தமான பெயரை
பொறுப்போடு பொருத்திய உன்
பெற்றோரும் தீர்க்கதரிசிகல்தான்.....
பாசத்தலைவா…ஆண்டவனிடம் நான் வேண்டுவது ஒன்றுதான்..
என் பேரனின் பேரனும் உனக்கு பிறந்த நாள் கவிதை ஒன்றை எழுதவேண்டும்…அதை நீ படிக்க வேண்டும் .....