செந்நீர்

அன்பே நீ சிந்தும் கண்ணீர் துளிகள் அர்த்தமற்றவை;
ஆயிரம் முறை கூறினேன் உன்னிடம்;
அடிக்கும் போது உணராத வலிதனை நீ அணைக்கும் கணம் உணர்ந்தேன்;
இருவிழி கொண்டு ஈர்க்காதே என்னை;
இன்றுடன் மறந்து விட்டேன் உன் இதழ் முத்தங்களை;
கண்ணீர் சிந்தாதே இனி கனவிலும் தீண்டேன் உன்னை;
தண்ணீர் அல்ல நான் அருந்துவது;
உன் நினைவுகளை விரட்ட நான் சிந்தும் செந்நீர்.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (11-Jun-16, 3:49 pm)
Tanglish : senneer
பார்வை : 98

மேலே