வெளிச்சமறியா மனித மனம்

தன்னை நார் நாராய் கிழித்தாலும்
மீண்டும் சேர்கிறது
நார்கயிராய் ,,,

தடுப்புகள் பல அமைந்தாலும்
தனக்கென ஒரு பாதை வகுத்து
சீறிப் பாய்கிறது
வெள்ளநீர் ,,,

கால் தடுக்கி பலமுறை விழுந்தாலும்
வலி அறியாமல்
சிரித்து கொண்டே
எழுகிறது பல் முளைத்த குழந்தை ,,,

சிறு கல் தடுக்கி விழுந்ததற்கே
வாழ்க்கை போனதே
என்று ஒப்பாரி வைக்கிறான்
பகுத்தறியும் மனிதன் ,,,,,

தன்னை சுற்றி இத்தனையும்
நடந்து கொண்டிருக்கிறது
என்பதே அறியாதவனாய் ,,,,,,,,!

எழுதியவர் : தங்கதுரை (11-Jun-16, 5:58 pm)
பார்வை : 169

மேலே