மதுவால் அது முடியாது•••

மதுவை விட்டு
மனிதன் விலகி
செல்ல வேண்டும்

அல்லது மனிதனை
விட்டு மது விலகி
செல்ல வேண்டும்
மதுவால் அது முடியாது
கஜானா நிறையாதே

இவ்விரண்டில் ஒன்று
நடவாவிடில் புருஷனை விட்டு மனையாள் வலகிச் சென்றிடுவாள்

இது கலியுகம் என்பதனை
மறந்துவிடுவாராயின்
வாழவந்தவள் பொருப்பன்று

இது கார்காலமன்று
அடித்தாலும் உதைத்தாலும்
குடித்தாலும் வாந்தி எடுத்தாலும் வாரிப் போட்டு
காலை சுற்றிக் கிடக்க

அன்று கல்வியறிவு இல்லை
இன்று கல்லாதவர் இல்லை

அன்று மானம் மரியாதைக்கு பயந்தனர்
இன்று இவர்களுக்கு மானம் மரியாதை அஞ்சுகிறது

ஒன்று கட்டுப்பட்டு போகவேண்டும் அல்லது
விட்டுக்கொடுத்து போகவேண்டும்
இது இன்றைய சூழ்நிலை
இல்லவே இல்லையே

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி மும (11-Jun-16, 2:48 pm)
பார்வை : 94

மேலே