உயிரே நீதானே

வண்ண வண்ணப் பறவைகள்
வந்து வந்துச் செல்லுதே
இருள் சூழ்ந்தக் குழலில்
வாசனை மலர்களாய்......


பிறையின் மடியில் பிரிந்துச் செல்லும்
மெல்லிய வாள்கள்
என் நெஞ்சில் பாய்ந்திடுதே......


குழல் கொண்ட மடலின் அருகில்
மின்னல் ஒளியுண்ட விழிகள்
என்னைத் திண்றிடுமோ?...


விழி முடும் இமைகளால்
உள் வைத்து மூடிடுமோ?......


தேன் சிந்தும் இதழ்கள்
தேனீகளாய் தீண்ட வருமோ?...
தீண்டிச் செல்லும் போது
என் தேகம் முழுதும் காயமாகுமோ?......


விழிகள் பேசும் மொழிகளில்
நான் விழுந்து விடுகிறேன்...
பதில் பேச மொழியின்றி
நான் மௌனமும் ஆகிறேன்......


ஏனோ?... தெரியவில்லை
உன்னைப் பார்க்கும் நொடிகள்
சிலையாய் உறைந்தும் போகிறேன்......


காற்றின்றி மூச்சில்லை...
நீரின்றி உலகில்லை...
நீயின்றி இதயத்தில் துடிப்புமில்லை......

எழுதியவர் : இதயம் விஜய் (11-Jun-16, 9:57 pm)
Tanglish : uyire neethanae
பார்வை : 104

மேலே