உண்மையாக உயிராய் நேசிக்கும் காதல் ஜோடிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்
![](https://eluthu.com/images/loading.gif)
காதல் என்னும் அழகிய பாலைவனத்தில் பயணம் செய்யும் அன்பான இரு இதயங்களே
நீங்கள் உங்களுக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் சண்டையிட்டுக் கொள்ளுங்கள்
ஆனால் சந்தேகம் பட்டு விடாதீர்கள்
உண்மையை ஆயிரம் முறை மனதில் வைத்துக் கொள்ளாமல் நேருக்கு நேர் நின்று துணிந்து கேட்டுவிடுங்கள் ஒரு நிமிடம் கண்ணீர் கவலையுடன் அங்கேயே அந்த கசப்பு கரைந்து மறைந்து விடும்
காதல் எதையும் எதிர்ப் பார்த்து வருவதில்லை அன்பை மட்டுமே அது எதிர்ப் பார்க்கும்
ஒருவரை உண்மையான அன்பால் நேசிக்குங்கும் நீங்கள்
பணம் வசதி படிப்பு இவைகளை காரணம் காட்டி பிரிந்துவிடாதிர்கள்
குறிப்பாக தங்களை பெற்றுர்கள் அச்சுறுத்தும் வார்த்தைகளால் உங்களை நேசிக்கும் இதயத்தை இழந்து விடாதிர்கள்
காதல் ஜோடிகள் கல்லறையுளும் ஒன்று சேரலாம் அது புனிதம்
ஆனால் இந்த மண் தரையிலே அது பிரிந்துவிட கூடாது அது பொழுது போக்கு
நேசிக்கும் இதயம் பிரிந்து விட்டால் அது இல்லறத்தில் இருந்தாலும் கல்லறைதான் .