கட்டித் தங்கம் நாங்களே

துள்ளித் துள்ளிப் பாடுவோம்
புள்ளி மானாய் ஓடுவோம்
பள்ளிக் கூடம் விட்டதும்
கள்ளிக் காட்டில் சுற்றுவோம் !
கொட்டும் மழையில் மூவரும்
சட்டை யின்றி ஆடுவோம்
சுட்டிப் பிள்ளை யாயினும்
கட்டித் தங்கம் நாங்களே !
துள்ளித் துள்ளிப் பாடுவோம்
புள்ளி மானாய் ஓடுவோம்
பள்ளிக் கூடம் விட்டதும்
கள்ளிக் காட்டில் சுற்றுவோம் !
கொட்டும் மழையில் மூவரும்
சட்டை யின்றி ஆடுவோம்
சுட்டிப் பிள்ளை யாயினும்
கட்டித் தங்கம் நாங்களே !