உடை

உனக்கு மட்டும் காட்ட வேண்டிய உடலை
ஊருக்கு காட்ட வைக்கிறாயே
இது என்ன உடை மாராப்பை மறைக்கா
மயான ஆடை
இதை போட்டுக்கொண்டு
வெளியில் தலைகாட்டுவதா
அது நான்
பிணமானால் தான் முடியும்
நான் போட்டு விட்டு
உன்ன வெளிய கூப்டுபோறனா இல்லையா மட்டும் பாரு
பாப்போம் பாப்போம்
ஐயோ அம்மா
விட்ருங்க
வேணாங்க
புனிதமான அங்கத்த மறைக்காத இந்த துணி வேணாங்க.
அம்மா........
விட்ருங்க.
உங்க கால்ல விழுந்து கெஞ்சி கேக்கறன்.
அம்மா.....
எப்புடி போட்டன் பாத்தியா.....
வாடி வெளிய... வா
எதுக்கு நீ இப்ப புடவைய எடுத்து மேல போத்திக்கற
தூக்கிபோட்டு வா
இப்ப நீ வர்றியா
இல்லனா தூக்கிட்டு போவா.....
நான் உன் ஒருத்தனுக்கு தான் முந்தான விரிச்சன்.
நீ என்ன இப்படியே தூக்கிட்டு போறதா இருந்தா அது என் பொணமா தான் இருக்கும்
அம்மா வலிக்குதுமா
எங்கமா இருக்க.
அம்மா... அம்மா....
ஐயோ வலிக்குதே..
ஆ.....
இப்ப எதுக்கு நீ
இப்படி சீன(Seenஅ= வித்த) போட்ற .
நீ சொன்னா உடனே செத்துடுவியா
தூக்கறன் இரு.
உம்உம்உம்
அம்மா.....அப்பா.....
வலிக்குதே
உயிர் போக போ து
உயிர் போனா லும் பரவா யில்ல
மானம் போக கூடாது
தூக்கி போடுகிறது
தூக்க போகையில்
தூக்குவது நின்றது
அம்மா..........
கை மாட்டிடுச்சிடு எழுந்திருடி
சேல வேற மாட்டிகிட்டு கெடக்கு.
கையை பிடித்து இழுத்து
புடவையும் சேர்ந்து வர என் மாராப்பை தானாக மறைத்தது சேலை
என் மீது விழும் பொழுது தான் தெரிந்தது அவருக்கு நான் இறந்ததே
உன் இறப்புக்கு காரணம் நான் தான் என்று
விஷத்தை உண்டு
அவர் உடலாலே
என் மாராப்பை போர்த்தினார்
~ பிரபாவதி வீரமுத்து