இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தித்திக்கும் திங்களிது எனதன்பு கணவன்
விழிதிறந்த திருநாளை பெற்ற திங்களிது
தமிழனென்ற சொல்லிற்கே தலைநிமிர்ந்து
நிற்கும் தலைமகனின் திருநாளிது ...
=========================================
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலா சூரியன்

நிலவுக்கு ஒளியூட்டும் நிலாஇவன் கண்மணியே ஆதவனுக்கு வீரமூட்டும் சூரியனின் ஆண்மையே ...

மென்மைகுணம் கொண்டவன் மேன்மையான திருமகன்
பெண்ணியத்தை காப்பதில் பெரும்புகழ் பெற்றவன்
கண்ணியத்தை காக்கின்ற கர்மவீர காமராசன்
கடமையை ஆற்றுவதில் காட்டாற்று வெள்ளமிவன் ...

உண்மைக்கு உயிரீந்தும் அரிச்சந்திர தோன்றலிவன்
பிறர்துன்பத்தை தீர்ப்பதில் சிபிமன்ன பேரனிவன்
நீதியை போற்றிடும் நெடுஞ்செழிய தோன்றலிவன்
அநீதியை அழிப்பதில் மனுநீதி பேரனிவன் ...

ஆண்டுகள் பலநூறு அன்பனிவன் வாழ்ந்திட
அன்பான வாழ்த்துக்களை அள்ளியள்ளி வீசுகிறேன்
தமிழ்போலே தரணியெங்கும் பெரும்பேறு பெற்றிட
தங்கமான வாழ்த்துகளை தமிழாலே கூறுகிறேன் ...

அன்புடன் பிரியமான மனைவி பிரியா .....

எழுதியவர் : பிரியாராம் (15-Jun-16, 12:08 pm)
பார்வை : 2718

சிறந்த கவிதைகள்

மேலே