அஞ்சலி•••
மல ரினுமங்கை யவள் மென் மையோ
மங் கையிலும லரது
மென் மையோ
மென் மையென் பதுவோ அவ் வியிர ண்டிற்கு மொன்றே
மனமுள்ள மங்கையர்க்கு
மலரின் மணமில்லை
மணமுள்ள மலருக்கு
மங்கையின் மனமில்லை
மணமுள்ள மலருக்கு
காலையில் ஜனனம்
மாலையில் மரணம்
மனமுள்ள மங்கையர்க்கு
ஆயிரமாயிரங் காலம்வரை
பேசிடும் வாழ்க்கை காவியம்
அதிசயம் யாதெனில்
மங்கையவள் உயிருள்ளளவும்
மலரைத்தேடி மகிழ்ந்திட்டாள்
மலர்களும் மங்கையவள்
மடிந்தப்பின் அவளைத்தேடி
வந்து அஞ்சலி செலுத்துதிங்கே