சிறு ஓடை

கடல் நீர்
உப்பாகிறது
#குழந்தையின் சிறுநீர்

*********

இசையை பிடிக்கமுடியவில்லை
#அவள் கால் கொலுசு

**************************

கணக்கு கத்துகொண்டேன்
கம்பி எண்ணி
# சிறார் சீர்திருத்தப்பள்ளி மாணவன்

**************************

இணைந்து நின்றுகொண்டிருக்கிறோம்
இறந்தபின்பும்
# புகைப்படம்

***************************

இராமரும் பாபரும்
கைகோர்த்தனர்
ஐயோத்தி பள்ளியில்

***************************

என்னை பற்றி நானே
சொல்லிக் கொள்ள கூடாது என்று
கூறி
தன்னை தானே புகழ்கிறான்
# மனிதன்

**************************

இலையை
கிளை சுமந்தாலும்
தாயாக முடியாது

*****~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (15-Jun-16, 6:49 am)
Tanglish : siru odai
பார்வை : 314

மேலே