இரவின் மனைவி
இரவுகள் கடந்துபோக
இனிமைகள் என்னை
அழைத்து விடுகின்றன
கடந்து போகும்
உன்னைக்காண
இதமான காற்று
உணர்வான ஓசை
இவைகளின் இசை
என்னிமைகளில் தெரிகின்றன
கண்ணீர்த்துளியாய்
அழகான அலங்கரிப்பு
சிறு சிறு மணிவெளிச்சம் எத்தனையோஒளிக்கின்றது
மகிழ்கின்ற மனதைக் கவர்ந்து கொள்ள
உரத்த சத்தம்
உற்றுப் பார்த்தால்
கதைத்து பேசுகின்றன
உருண்டு விளையாடும்
அலைகள்
குளிர்கின்றன
மெதுவாக
வருடுகின்ற என்னை
மறக்கின்ற அளவுக்கு
ஆனந்தமாய்உறங்குகின்றது
உலகம் தூய்மையாய்
பறந்திடச் செய்தபறவைகள்
கீச்சிடும் சிறுகிளிகளின்
ஓசை ஓலிக்கின்றது
வீசுகின்ற காற்றுக்கு பயந்து
கனவுகள் நினைவுகளை
ஆட்சி செய்யும் நேரமிது
இரவுகளுக்கு இரக்கமுண்டு உறக்கத்திலும்கூட
இரக்கமாய் இருக்கும் உறவுகளை அழைக்கின்றது
குயில் பாடும்
மயில் ஆடும்
வேளை வருகின்றது
இரவுகளும் தொலைகின்றது
எப்போது பூக்கும்
ஆயிரக்கணக்கான
நட்சத்திரங்கள்
ஓர் இராப் பொழுதுக்காய்
பல மணிப் பொழுது
காத்துக்கிடக்கின்றேன்
இன்று
பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

