கடற்கரை
![](https://eluthu.com/images/loading.gif)
வானம் உறிஞ்சிய
பெண்ணுரு
கொப்பளித்த மேகம்
அந்தி நிறைக்கும்
சிவப்பு
முத்தத் தீற்றலாய்
கடலில் பொங்கி
நிறைத்தது!
சமுத்திரம்
விழுங்கும்
நிலவலையில்
ரகசியங்கள்
சுமக்கும் மேகம்
கிழிந்து
கசியும் கருமை!
அகப்படா
எல்லையின்மையில்
பயம் எனும்
மரண நுனியில்
திளைத்து
வந்து போகும் அலை!
துடிக்கும்
அமைதியின்மையை
தொடும் வானம்
புணர்ந்து
பகலும் இரவும்!
முங்கிய
காலடிகள்
அழிந்து
நித்தியமானதில்
விட்டகலா மண்
இங்கு
உப்பானது!
நீர்வெளிப் பொத்து
உந்தும்
நிலாப் பறவை
உதிர்த்த
விதைக்கனா!
அசைவின் மூர்ச்சை
இழுத்த
அலையடிப்பு
ஆழி மௌனத்தில்
சாசுவதமான
பேரதிர்ச்சியில்!